1989-ல் இங்கிலாந்தில் விளையாடியபோது ஒவ்வொரு நாளும் சிக்கன் மற்றும் சிப்ஸ் அதிகம் சாப்பிடுவேன். இதனால் 6 மாதங்களில் 20 கிலோ வெயிட் போட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார் ஷேன் வார்ன்.
கிரிக்கெட் பந்துவீச்சில், 'சுழல் ஜாம்பவான்' என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஷேன் வார்ன். 90’களில் உலகின் நம்பர் 1 லெக் ஸ்பின்னராக வலம் வந்த ஷேன் வார்ன், இன்றுவரை லெக் ஸ்பின்னர்களுக்கு அவர்தான் ரோல் மாடல்.
சர்வதேச கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் கிரிக்கெட்டின் எக்காலத்துக்குமான மிகச்சிறந்த வீரர். 2007ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய ஷேன் வார்ன், சமீபத்தில் வெளியான ‘ஷேன்’ என்ற ஆவணப்படத்தில், தனது சொந்த வாழ்க்கையை பற்றி பல விஷயங்களைப் பகிந்து கொண்டார்.
அதில், “1989ல் இங்கிலாந்தில் விளையாடியபோது ஒவ்வொரு நாளும் சிக்கன் மற்றும் சிப்ஸ் அதிகம் சாப்பிடுவேன். இதனால் 6 மாதங்களில் 20 கிலோ எடை போட்டேன். 79 கிலோ எடை இருந்த நான் 99 கிலோ அதிகரித்தேன்.
கிரிக்கெட் மட்டுமே எப்போதும் எனது முதல் முன்னுரிமை. அதற்கடுத்துதான் குடும்பம். அதற்காக நான் என் குடும்பத்தை மதிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. என்னைப் போலவே குடும்பம் நன்றாக இருக்க, சில நேரங்களில் நான் சுயநலமாக இருக்க வேண்டும், பெரும்பாலான நேரங்களில் நான் அப்படி இருந்தேன். எனக்கு சத்தமான மியூசிக் பிடிக்கும், புகைப் பிடித்தேன், மது அருந்துவேன். கொஞ்சம் லெக் ஸ்பின் பந்து வீசினேன். அதுதான் நான். அப்படி இருந்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று ஷேன் வார்ன் கூறினார்.