நான் ஜடேஜாவுக்கு மாற்று வீரரா? அக்‌ஷர் பட்டேல் பேட்டி

நான் ஜடேஜாவுக்கு மாற்று வீரரா? அக்‌ஷர் பட்டேல் பேட்டி
நான் ஜடேஜாவுக்கு மாற்று வீரரா? அக்‌ஷர் பட்டேல் பேட்டி
Published on

’கேப்டன் விராத் கோலி ஆதரவாக இருப்பது சிறப்பாக விளையாட உதவுகிறது’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் சொன்னார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது.  இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வேகப்பந்துவீச்சாளர் அக்‌ஷர் பட்டேல், ‘நன்றாக விளையாடினால், கேப்டன் விராத் கோலி ஆதரவாக இருக்கிறார். எனது விருப்பத்துக்கு ஏற்ப பந்து வீசவும் சுதந்திரம் அளித்திருக்கிறார். எப்படி பந்து வீச வேண்டும் என்பதை எங்கள் (சாகல் மற்றும் நான்) முடிவுக்கே விட்டுவிடுகிறார். நாங்கள் கலந்து பேசி எப்படி பந்துவீச வேண்டும் என்பதை முடிவு செய்து வீசுகிறோம். பந்துவீச்சு கைகொடுக்காவிட்டாலும் துணையாக இருப்பேன் என்று கேப்டன் சொல்வது, நெருக்கடி இல்லாமல் ஆட உதவுகிறது. அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு எனது பந்துவீச்சு ஸ்டைல் தெரியும். ‘எப்படி பந்துவீச வேண்டும் என்பது உனக்குத் தெரியும். அதனால்தான் அணியில் இருக்கிறாய். அதை தொடர்ந்து செய்’ என்று கூறுவார். நெருக்கடியான சூழலில் நிலமையை எப்படி சமாளிப்பது என்பது பற்றி டிப்ஸ்கள் தருவார். அது எனக்கு உதவுகிறது. ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்று வீரராக என்னைப் பார்க்கவில்லை. ஒரு போட்டியில் நன்றாக விளையாடினால் அடுத்த போட்டியில் தானாக இடம் கிடைக்கும். இன்று போட்டி நடக்கும் ராஜ்கோட் எனது சொந்த ஊர் மைதானம். இந்த பிட்ச் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும். அதற்கு ஏற்றபடி சில திட்டங்கள் வைத்துள்ளேன்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com