"நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கு ஆதரவில்லை" விராட் கோலி

"நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கு ஆதரவில்லை" விராட் கோலி
"நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கு ஆதரவில்லை" விராட் கோலி
Published on

நான்கு நாள்களுக்கு மட்டுமே நடத்தப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கு என் ஆதரவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அசாம் மாநிலம் தலைநர் கவுஹாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி " டெஸ்ட் போட்டி நாள்களை குறைப்பது சரியாக இருக்காது. டெஸ்ட் போட்டியின் நாள்களை குறைப்பதற்கு நான் ஆதரவளிக்கவில்லை. அவ்வாறு மாற்றங்கள் கொண்டு ‌வந்தால் வரும் நாள்களில், அதை 3 நாள்களாக குறைப்பதற்கு கோரிக்கை வரும் என்றார் அவர்.

டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாகக் குறைப்பதற்கு சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) யோசித்து வருவதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. இதனை 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் அறிமுகம் செய்ய ஐசிசி உத்தேசித்திருப்பதாகவும் கூறப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி "முதலில் ஐசிசி இதனை கொண்டு வரட்டும் பின்பு முடிவு செய்யலாம்" என்று கூறியிருந்தார்.

இதற் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் மற்றும் ஜஸ்டின் லாங்கர் ஆகியோர் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். நாதன் லயன் கூறும்போது " டெஸ்ட் கிரிக்கெட்டை 4 நாளாகக் குறைப்பது கேலிக்கூத்தானது. இந்த யோசனையை ஐசிசி பரிசீலிக்காது என்று நம்புகிறேன்" என்றார். ஜஸ்டின் லாங்கா் கூறுகையில் " நான் பாரம்பரியத்தை விரும்புபவன். எனக்கு 5 நாள் டெஸ்ட் கிரிக்கெட்டே விருப்பம்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com