இந்நிலையில், போட்டிக்குப் பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய கேப்டன் ஆரோன் பின்சிடம், வார்னரை எப்படி ஆதரித்தீர்கள் என்று கேட்டபோது, ''தொடர் நாயகனாக டேவிட் வார்னர் வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு நான் ஜஸ்டின் லாங்கரை (பயிற்சியாளர்) அழைத்து, 'வார்னரை பற்றி கவலைப்படாதீர்கள், அவர் தொடர் நாயகனாக இருப்பார்' என்று சொன்னேன். டேவிட் வார்னர் அவ்வளவுதான் முடிந்து விட்டார் என்றெல்லாம் விமர்சகர்கள் எப்படி எழுதினார்கள் என்று தெரியவில்லை. அவர் எல்லா நேரத்திலும் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். மேலும் அவர் ஒரு போராளி'' என்று ஃபின்ச் குறிப்பிட்டார்.