உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தன்னை தோற்கடித்த ஜஸ்டின் கேட்லினை கேலி செய்த தனது ரசிகர்களை உசேன் போல்ட் கண்டித்துள்ளார்.
உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தாம் தோல்வியடைந்ததால் மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பதாகக் கூறப்படுவதை உசேன் போல்ட் மறுத்திருக்கிறார். போட்டியில் வெற்றி பெற்ற அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லினை தாம் ஒரு போட்டியாளராகவே எப்போதும் கருதி வந்ததாகத் தெரிவித்த போல்ட், பரிசு வழங்கும் நிகழ்ச்சியின்போது, அவரைக் கேலி செய்தது நியாயமற்ற செயல் என்று கண்டித்திருக்கிறார்.
தாம் சந்தித்த சிறந்த போட்டியாளர்களுள் கேட்லினும் ஒருவர் என்றும் புகழ்ந்திருக்கிறார் உசேன் போல்ட். தம்மைக் கேலி செய்தது குறித்து வருந்தியிருக்கும் கேட்லின், தம்மை விளையாட்டு உலகம் ஒரு வில்லன் போலப் பார்ப்பது கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.