ஹாலே ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான டேனில் மெட்வடேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காக்ஸ்.
ஜெர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள ஹாலேயில் ஆண்களுக்கான ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெட்வெடேவ் , போலந்து நாட்டைச் சேர்ந்த வீரர் ஹூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதினார். இந்தப் போட்டியில் ஹர்காக்ஸ் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மெட்வடேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றி குறித்துப் பேசிய ஹர்காக்ஸ், "மெட்வடேவ் உலகின் சிறந்த வீரர். எனவே அவரை எதிர்த்து மிகவும் தந்திரமாக விளையாட வேண்டும். அதைத்தான் நான் செய்தேன்" என்றார்.
முன்னதாக ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் ஹூபர்ட் ஹர்காக்ஸ் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸை தோற்கடித்தார். மறுபுறம் டேனில் மெட்வெடேவ் அரையிறுதியில் ஆஸ்கார் ஓட்டேவை தோற்கடித்தார்.
இதையும் படிக்கலாம்: இலங்கை - ஆஸி. போட்டியின்போது பந்தை கேட்ச் பிடிக்க முயன்ற நடுவர்.. வைரலாகும் புகைப்படம்!