"அடிலெய்ட் தோல்விக்கு பின்பு நாங்கள் நினைத்தது இதுதான்"-ஹனுமா விஹாரி!

"அடிலெய்ட் தோல்விக்கு பின்பு நாங்கள் நினைத்தது இதுதான்"-ஹனுமா விஹாரி!
"அடிலெய்ட் தோல்விக்கு பின்பு நாங்கள் நினைத்தது இதுதான்"-ஹனுமா விஹாரி!
Published on

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த பின்பு வீரர்கள் நினைத்தது இதுதான் என இந்திய அணியின் வெற்றிப் பயணம் குறித்து பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி விவரித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று வரலாற்று வாகைசூடியது இந்திய கிரிக்கெட் அணி. ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை சந்தித்தது இந்திய அணி. அப்போது பலரும் இந்தியா 4-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழக்கும் என கருதினர். ஆனால் அந்தக் கருத்துகளை எல்லாம் தவிடுபொடியாக்கியது இந்திய இளம் படை.

அதிலும் சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் காயத்துடன் விளையாடிய ஹனுமா விஹாரி, அஸ்வினுடன் இணைந்து திறமையாக விளையாடி அப்போட்டியை டிரா செய்து ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்தத் டெஸ்ட் தொடர் குறித்து 'இந்தியா டுடே' ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார் ஹனுமா விஹாரி. அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் "ஒரு மோசமான தோல்விக்கு பின்பு மோசமான விமர்சனங்கள் குற்றச்சாட்டுகள் எழும். ஆனால் இவையெல்லாம் அணிக்கு வெளியேதான் நடக்கும். ஆனால், ஒரு அணியாக நாங்கள் அந்தத் தோல்விக்கு பிறகு ஒற்றுமையாகவே இருந்தோம். அந்தப் போட்டியின் மோசமான தருணங்கள் குறித்து நாங்கள் பேசவேயில்லை. எதிர்காலத்தில் இதுபோல் நடக்கக் கூடாது என்று மட்டும் நாங்கள் உறுதியாக இருந்தோம்" என்றார் விஹாரி.

மேலும் பேசிய அவர் "அந்தத் தோல்விக்கு பின்பு இந்தத் தொடரை நாங்கள் 3 போட்டிகள் கொண்டதாகவே எடுத்துக்கொண்டோம். அதுதான் இந்த வெற்றிக்கு காரணம். முதல் தோல்விக்கு பின்பு நாங்கள் கொண்ட நேர்மறை எண்ணம்தான் தான் இந்த வரலாற்று வெற்றிக்கு காரணம். இதற்கு முக்கியக் காரணம் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிதான். அவர்தன் எங்களை மிகவும் உத்வேகப்படுக்கினார்" என்றார் ஹனுமா விஹாரி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com