டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கான அரையிறுதி வாய்ப்பு எப்படி?

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கான அரையிறுதி வாய்ப்பு எப்படி?
டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கான அரையிறுதி வாய்ப்பு எப்படி?
Published on

துபாயில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 12 சுற்றின் 2-ஆவது லீக் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. ஏற்கெனவே தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்தியா மீண்டும் ஒருமுறை பெரும் சருக்கலை சந்தித்துள்ளது. இந்தத் தோல்வியினால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 போட்டியில் 12 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இரு குழுவிலும் ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் பங்கேற்கும். இதில் குறைந்தபட்சம் மூன்று வெற்றிகளை அதிக நெட் ரன் ரேட்டுன் பதிவுசெய்தால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், நியூசிலாந்துக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் தோற்றுள்ளது.

இதனால், இந்தியாவின் நெட் ரன் ரேட் -1.0609 என மைனசில் இருக்கிறது. அடுத்து ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா போன்ற அணிகளுக்கு எதிராகத்தான் இந்தியா விளையாடவுள்ளது. இந்த அணிகளுக்கு எதிராக இந்தியா அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றாக வேண்டும். அப்படியென்றால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேற எம்மாதிரியான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

வாய்ப்புகள் என்ன?

இந்திய அணியின் நெட் ரன் ரேட் இரண்டு தோல்விகளுடன் -1.0609 என இருக்கிறது. ஆப்கானிஸ்தான் 2 வெற்றியுடன் +3.097 வைத்திருக்கிறது. இதனால், அந்த அணிக்கு எதிரான போட்டியில் கிட்டத்தட்ட 130 ரன்கள் வித்தியாசத்திலாவது இந்தியா வெல்ல வேண்டும். அப்போதுதான், அந்த அணியின் நெட் ரன் ரேட் கிடுகிடுவென குறையும். அடுத்து ஸ்காட்லாந்து, நமீபியா அணிகளுக்கு எதிராகவும் இந்தியா மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் இந்திய அணியின் நெட் ரன் ரேட் +2.000 அளவுக்கு முன்னேறும்.

இது மட்டுமல்லாமல் இந்தியா, அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றிப் பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகாது. நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்துதான் அமையும். ஆப்கானிஸ்தான் அணி முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் வென்றுள்ளது. அடுத்து இந்தியா, நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்கவுள்ளது. நியூசிலாந்து அணி நமீபியா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியில் நியூசிலாந்து அணி படுதோல்வியை சந்திக்க வேண்டும்.

அப்போதுதான் இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் இருக்கும். இதனால்தான், இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு (+3.097) எதிரான போட்டியில் மெகா வெற்றியைப் பதிவுசெய்து, அந்த அணியின் நென் ரன் ரேட்டை குறைக்க வேண்டும். இல்லையென்றால் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com