உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற லியோனல் மெஸ்ஸியுடன், ஒப்பிடும்போது ரொனால்டோவின் சம்பளம் அதிகம்.
போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவை சேர்ந்த அல்-நசார் அணிக்காக விளையாட பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். 37 வயதான ரொனால்டோ இந்த கிளப்புக்காக 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரொனால்டோ நீண்ட காலமாகவே கால்பந்து உலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அல்-நசார் அணியில் இணைந்ததன் மூலமாக அவர் ஒவ்வொரு ஆண்டும் 177 மில்லியன் யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் 1,760 கோடி) சம்பாதிக்கவிருக்கிறார்.
மெஸ்ஸி Vs. ரொனால்டோ யாருக்கு அதிக சம்பளம்..?
உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற லியோனல் மெஸ்ஸியுடன், ஒப்பிடும்போது ரொனால்டோவின் சம்பளம் அதிகம்தான். கிளப் அளவில் பிஎஸ்ஜி அணியுடன் இணைந்துள்ள மெஸ்ஸி ஆண்டுக்கு 120 மில்லியன் டாலர் மட்டுமே சம்பளமாக பெறுகிறார்.
அதிக சம்பளம் வாங்கும் முதல் 5 கால்பந்து வீரர்கள்:
கிறிஸ்டியானோ ரொனால்டோ: மான்செஸ்டர் யுனைடெட் உடனான ஒப்பந்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவை சேர்ந்த அல்-நசார் அணியுடன் தனது கால்பந்தாட்டதை தொடரவுள்ளார் ரொனால்டோ. வருடத்துக்கு 177 மில்லியன் யூரோ சம்பளத்துக்கு ரொனால்டோவை அல் நஸர் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது.
கிலியான் எம்பாப்பே: ரியல் மாட்ரிட் கிளப் உடனான ஒப்பந்தத்தை புறக்கணித்த பிறகு, பிரெஞ்சு ஜாம்பவான்களுடன் 128 மில்லியன் டாலர்களுக்கு ஒரு பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் எம்பாப்பே.
லியோனல் மெஸ்ஸி: ஏழு முறை பாலன் தோர் (தங்கப்பந்து) விருது வென்ற லியோனல் மெஸ்ஸி, அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். பிஎஸ்ஜி கிளப் அணியுடன் இணைந்துள்ள மெஸ்ஸி ஆண்டுக்கு 120 மில்லியன் டாலர் ஊதியத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நெய்மர்: பிஎஸ்ஜி அணியின் நெய்மர் ஆண்டுக்கு 87 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார்.
முகமது சலா: சமீபத்தில் லிவர்பூல் விங்க அணியுடனான ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்த முகமது சலா, வருடத்திற்கு 53 மில்லியன் டாலர் ஊதியம் பெறவிருக்கிறார்.
தவற விடாதீர்: ”அவர் ஒரு மதிப்புமிக்க வீரராக இருப்பார்” - தோனியை பிசிசிஐக்கு பரிந்துரைத்த போத்தார் மறைவு!