“ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிகையாகவும், தைரியமாகவும் இருக்கிறேன்” - ஹாக்கி வீராங்கனை வந்தனா

“ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிகையாகவும், தைரியமாகவும் இருக்கிறேன்” - ஹாக்கி வீராங்கனை வந்தனா
“ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிகையாகவும், தைரியமாகவும் இருக்கிறேன்” - ஹாக்கி வீராங்கனை வந்தனா
Published on

ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாகவும் தைரியமாகவும் தாம் இருப்பதாக சாதியை குறிப்பிட்டு அவதூறு செய்தவர்களுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா பதிலளித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் முதல் ஹாட்ரிக் கோல் அடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை பெற்றவர் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வந்தனா கட்டாரியா. அரை  இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தப்போது மாற்று சமூகத்தினர் இருவர் வீராங்கனை வந்தானவின் வீட்டின் முன்பு பட்டாசு வெடித்து, வந்தனாவின் குடும்பத்தினரை சாதி பெயரை குறிப்பிட்டு அவதூறாக பேசி அவமரியாதை செய்துள்ளனர். மேலும், பட்டியலினத்தவர்கள் அணியில் இடம்பெற்றதால் தான் இந்திய அணி தோல்வி அடைந்ததாக அவர்கள் கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள வந்தனா, ''புத்தரின் ஞானமும், அம்பேத்கரின் நிலைத்தன்மையும், கான்ஷிராமின் உறுதியும் என்னுள் இருக்கிறது. நான் தலித் ஆக இருப்பதில் பெருமை அடைகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிகையாகவும், தைரியமாகவும் இருப்பதாக வீராங்கனை வந்தனா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கைது செய்யப்பட்டவர்களில் விஜய் பால் என்பவர் உத்தரகாண்ட் மாநில ஹாக்கி வீரர் என தெரியவந்துள்ளது. அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்படமாட்டார் என மாநில ஹாக்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com