ஓய்வை அறிவித்த இந்திய ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ்... பாரிஸ் ஒலிம்பிக்குடன் விடைபெறுகிறார் எல்லை காப்பான்!

உலகின் தலைசிறந்த ஹாக்கி வீரர்களில் ஒருவரான இந்தியாவின் ஸ்ரீஜேஷ், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கால்பந்து கோலோச்சும் கேரளாவில் இருந்து உலகம் மெச்சும் ஹாக்கி வீரராக ஸ்ரீஜேஷ் மிளிர்ந்தது எப்படி? பார்க்கலாம்.
ஸ்ரீஜேஷ்
ஸ்ரீஜேஷ்pt web
Published on

திறமையை நிரூபிக்க 3 ஆண்டுகள்

ஹாக்கியை எப்படி விளையாட வேண்டும் என உலகிற்கே பாடம் எடுத்த இந்திய அணியின் நிலைமை 1980-க்குப் பிறகு தலைகீழாக மாறிப்போனது... இழந்த பெருமை மீளுமா என ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் எதிர்நோக்கிய ஒட்டுமொத்த தேசத்தின் கனவு 41 ஆண்டுகளுக்குப் பிறகே நனவானது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்,

கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்
கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்
கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்

ஸ்ரீஜேஷின் பயணம் அவ்வளவு எளிதானதாக அமைந்துவிடவில்லை. கால்பந்து கோலோச்சும் கேரளாவில் ஹாக்கி கிளவுஸை கையில் ஏந்தினார் ஸ்ரீஜேஷ். வீட்டில் இருந்த பொருளாதார ஆதாரமான பசு மாட்டை விற்று ஸ்ரீஜேஷுக்கு ஹாக்கி கிட்டை வாங்கிக் கொடுத்தார் அவரது தந்தை. அதுவே அவரது மனதில், எதையாவது சாதித்தாக வேண்டும் என்ற நெருப்பை விதைத்தது!

தனது அபார திறமையால், 2006ஆம் ஆண்டே இந்திய அணியில் இடம்பெற்றாலும், சீனியர் வீரர்கள் நிறைந்த அணியில் ஸ்ரீஜேஷ் தனது திறமையை நிரூபிக்க காத்திருக்க வேண்டியிருந்தது.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு... 2009-ல் கோல் கீப்பர் பல்ஜித் சிங்கின் கண்ணில் ஏற்பட்ட காயம் ஸ்ரீஜேஷின் இருளை நீக்கியது. கிடைத்த வாய்ப்பை, கிளவுஸ் மாட்டிய தனது இரு கைகளாலும் கெட்டியாக பிடித்துக் கொண்ட அவர் அதன் பிறகு இந்தியாவின் முதன்மை தேர்வாகிப் போனார்.

ஸ்ரீஜேஷ்
82 நிமிட பட்ஜெட் உரை; அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள் எவை? இடம்பெறாத தமிழ், தமிழ்நாடு வார்த்தை!

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம்

கோல் கீப்பரின் பணி பந்தை தடுப்பது மட்டுமே அல்ல. ஆட்டத்தை போக்கை கணிப்பதும், தடுப்பாட்டக் காரர்களுக்கு சரியான கட்டளையிடுவதும் கோல் கீப்பரின் திறமைக்குச் சான்று. அதில் ஸ்ரீஜேஷுக்கு நிகர் அவர் மட்டுமே.

இந்திய ஹாக்கியின் நட்சத்திரமாக உருவெடுத்தாலும், 2014ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி அவரை புகழின் உச்சிக்கு இட்டுச் சென்றது. பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இரண்டு பெனால்டிகளை தடுத்து தேசத்தின் ஹீரோவாக மாறினார் ஸ்ரீஜேஷ். 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியிலும் இந்திய அணி தங்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவரும் ஸ்ரீஜேஷ்தான்.

2021, 2022ஆம் ஆண்டுகளில் சிறந்த கோல்கீப்பருக்கான விருதுகளை வழங்கி அவரை கவுரவித்தது சர்வதேச ஹாக்கி சம்மேளனம். இந்தியாவின் மிக உயரிய விருதான தயான் சந்த் கேல் ரத்னாவும், ஹாக்கி நாயகனின் கைகளில் தவழ்ந்தது. இவை எல்லாவற்றிலும் மேலாக அவர் கருதுவது 2021ஆம் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை கழுத்தில் ஏந்தியதைத்தான்.

ஸ்ரீஜேஷ்
ரியல் எஸ்டேட் துறைக்கு செக் வைத்த பட்ஜெட்... பாதகங்கள் இதோ..!

குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய நேரமிது

3ஆம் இடத்திற்கான போட்டியில் பலம் வாய்ந்த ஜெர்மனியை 5-க்கு 4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 41 ஆண்டுகால பதக்க தாகத்தை தணித்தது இந்தியா. அந்த போட்டியில் தன் பக்கம் வரும் பந்துகளை அநாயசியமாக தடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் இந்தியாவின் எல்லைக் காப்பான். அவர் வெற்றிக் களிப்பில் கோல் கம்பத்தின் மீது ஏறி கம்பீகரமாக போஸ் கொடுத்ததை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.

மணிமகுடங்கள் தரித்த தனது 18 ஆண்டுகால ஹாக்கி வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார் ஸ்ரீஜேஷ்.

தனக்காக பல தியாகங்களை செய்த தனது குடும்பத்தை கவனிக்க வேண்டிய நேரம் இது எனக் கூறிய அவர், ஹாக்கியை வளர்க்க அடிமட்ட அளவில் இருந்து முயற்சிகளை மேற்கொள்வேன் என புன்முறுவல் பூத்தார்.

கடைசியாக ஒருமுறை பாரிஸ் ஒலிம்பிக்கில் களம் காணவுள்ள இந்திய ஹாக்கியின் ஜாம்பவானை, தங்கப் பதக்கத்துடன் வழியனுப்புவோம் என இந்திய அணியினரும் சூளுரைத்துள்ளனர். இந்திய அணியை அரண்போல் காத்த ஜாம்பவான் ஸ்ரீஜேஷ், சாதனைப் பதக்கத்துடன் விடைபெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஸ்ரீஜேஷ்
நிதியமைச்சரின் பட்ஜெட்டா? சந்திரபாபு, நிதிஷ் தயாரித்த பட்ஜெட்டா? - நுகர்வோர் அமைப்பின் வழக்கறிஞர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com