'ஹிட்மேன்' அடித்தார் 300 சிக்ஸர்கள் !

'ஹிட்மேன்' அடித்தார் 300 சிக்ஸர்கள் !
'ஹிட்மேன்' அடித்தார் 300 சிக்ஸர்கள் !
Published on

ரசிகர்களால் அன்போடு "ஹிட்மேன்" என அழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 300 சிக்ஸர்கள் அடித்து சாதனைப்படைத்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று முக்கியமான லீக் போட்டி நடைப்பெற்றது. இந்தப் போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாழ்வா சாவா போன்றதாக இருந்தது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பெற்றால்தான் ஐபிஎல் தொடரில் நீடிக்க முடியும். ஆனால் இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிப்பெற்று புள்ளிகள் பட்டியலில் 6 ஆவது இடத்துக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியின் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் முஜிபுர் ரஹ்மான் வீசிய 17-வது ஓவரில் சிக்ஸர் அடித்ததன் மூலம் இந்தச்  சாதனையை எட்டினார் ரோகித் சர்மா.மும்பையைச் சேர்ந்த ரோகித் சர்மா, 78 சிக்ஸர்களை சர்வதேச போட்டியிலும் 183 சிக்ஸர்களை ஐபிஎல் தொடரிலும் அடித்துள்ளார். சாம்பியன்ஸ் லீக், சையத் முஸ்டாக் அலி தொடர்களில் 40 சிக்ஸர்களும் ரோகித்தின் கணக்கில் உள்ளன. 

அதிக சிக்ஸர்கள் அடித்துள்ள வீரர்கள் பட்டியலில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 844 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். பொல்லார்ட் 555, பிரன்டன் மெக்கல்லம் 445, ட்வைன் ஸ்மித் 376, டேவிட் வார்னர் 319, ரோகித் 301 சிக்ஸர்களை விளாசியுள்ளனர். ஐபிஎல் போட்டியிலும் கெயில்தான் அதிக சிக்ஸ்சர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். இவர் கணக்கில் 290 சிக்ஸர்கள் உள்ளன. ரோகித்துக்கு பட்டியலில் இரண்டாவது இடம். தோனி , சுரேஷ் ரெய்னா தலா 180 சிக்ஸர்களும் ஏபிடிவில்லியர்ஸ் 179 சிக்ஸர்களும் விளாசியுள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com