``ஹே எப்புட்றா! சான்சே இல்ல!’’ - கால்பந்து உலகையே ஸ்தம்பிக்க வைத்த வீரர்! மிரள வைத்த ஷாட்!

``ஹே எப்புட்றா! சான்சே இல்ல!’’ - கால்பந்து உலகையே ஸ்தம்பிக்க வைத்த வீரர்! மிரள வைத்த ஷாட்!
``ஹே எப்புட்றா! சான்சே இல்ல!’’ - கால்பந்து உலகையே ஸ்தம்பிக்க வைத்த வீரர்! மிரள வைத்த ஷாட்!
Published on

இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் ஸ்டீபன் ஹம்ப்ரிஸ் என்பவர், நம்பவே முடியாத தன் ஒற்றை கோலால், கால்பந்து உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

எல்லா தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்களும் கோல் அடிப்பதில் வல்லவர்களாகவோ, ஜாம்பவான்களாகவோ இருப்பது இல்லை. ஆனால் சில நம்பமுடியாத தருணங்களில், சில நம்பமுடியாத வீரர்களிடமிருந்து, சில நம்பவே முடியாத கோல்கள் அடிக்கப்படும். அன்றைய நாள் கால்பந்தாட்ட உலகை ஒரு குதூகலத்திற்கு அழைத்து செல்லும், அந்த வீரர் அதற்குபிறகு ஒரு ஜாம்பவான் வீரராக மாறுவார், இல்லை ஏற்கனவே ஜாம்பவான் வீரராகவே இருந்து இருப்பார். அப்படி நம்ப முடியாத வகையில், ஒரு நம்பவே முடியாத கோலை அடித்துள்ளார், இங்கிலாந்து அணியின் கால்பந்தாட்ட வீரர் ஸ்டீபன் ஹம்ப்ரிஸ்.

ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் ஸ்காட்டிஸ் லீக் எனப்படும் தொழில்முறை கால்பந்து லீக்கில், ஹார்ட் ஆஃப் மிட்லோதியன் மற்றும் டண்டீ யுனைடெட் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஹார்ட்ஸ் அணியானது 2 கோல்களிலும், டண்டீ அணி 1 கோலிலும் இருந்த நிலையில், போட்டியின் முடிவிற்காக கூடுதலாக சில நிமிடங்கள் கொடுக்கப்பட்டன. அந்த கூடுதல் நிமிடங்களை பயன்படுத்தி டண்டீ அணி கோலை பதிவு செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில், 90+8 நிமிடங்களில் ஒரு மாயாஜால வித்தையை நிகழ்த்தி காட்டினார் ஹார்ட்ஸ் அணியின் ஸ்டீபன் ஹம்ப்ரிஸ். அந்த நிமிடத்தில் அவரடித்த அந்த ஒரு கோலானது, கால்பந்து உலகையே நம்பகத்தன்மையின் விளிம்பிற்கே எடுத்துச்சென்றது.

கிரவுண்டின் நடுப்பக்கதில் இருந்து கோல் அடிக்க முடியுமா? சொன்னால் நம்புவீர்களா?

டண்டீ அணியின் வீரர் ஒருவர் கார்னரில் இருந்து இரண்டாவது கோலை அடிக்கும் முயற்சியில், ஹர்ட்ஸ் அணியின் கோல் போஸ்ட் அருகில் பந்தை தூக்கியடிப்பார். அதை டண்டீ அணியினர் கோலாக மாற்றும் நேரத்தில், அதை தடுத்து நிறுத்திய ஹ்ர்ட்ஸ் அணி வீரர் பந்தை ஸ்டீபனிடம் பாஸ் செய்வார். அதை பற்றிக்கொண்டு பந்தை மின்னல் வேகத்தில் கிரவுண்டின் நடுப்பகுதி வரை எடுத்து வந்த ஸ்டீவன், முன்னால் சிறுது நேரம் கோல் கீப்பரையும், கோல் போஸ்ட்டையும் பார்த்தார், அப்போது அவர் இன்னும் சிறிது தூரம் முன்னால் பந்தை எடுத்து செல்வார் என அனைவரும் நினைத்த கனத்தில், எந்த கால்பந்து வீரரும் செய்யாத ஒரு முயற்சியை திடீரென காலில் எடுத்தார் ஸ்டீவன் ஹாம்ப்ரிஸ். கிரவுண்டின் நடுவிலிருந்தே அவர் கோல் போஸ்ட்டை நோக்கி ஒரு பெரிய ஷாட்டை பதிவு செய்தார்.

"No Way"- கமண்டேட்டர்களின் கமண்டரி ”வாய்ப்பில்லை” என்று கேட்டது!

பொதுவாக எந்த கால்பந்து வீரரும் கிரவுண்டின் நடுவில் இருந்து கோலடிக்கும் முயற்சியில் இறங்கமாட்டார்கள். ஆனால் ஸ்டீபனிற்கு அந்த எண்ணம் தோன்றியது ஏன் முயற்சிக்க கூடாதென்று, ஏனென்றால் போட்டியை கிட்டத்தட்ட சில் செய்துவிட்டிருந்தனர் ஹார்ட்ஸ் அணியினர். 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில் அவர் அந்த முயற்சியை எடுப்பதாய் முடிவு செய்திருந்தார். அவர் அந்த பெரிய ஷாட்டை, கிரவுண்டின் நடுப்பகுதியில் இருந்து அடித்த போது, கமண்ட்ரியிலிருந்து "No Way" இது எப்படி முடியும் என்ற குரல் ஒலித்தது. ஆனால் பந்து பறந்து செல்லும் போது தான் தெரிந்தது கோல் கீப்பர் அவரிடத்திலிருந்து பாதி தூரம் வெளியே வந்து நின்றிருந்தது.

ஸ்டீபனின் முயற்சியை சற்றும் எதிர்பாராத டண்டீ அணியின் கோல்கீப்பர் பிரைட்டீ, பின்னோக்கி கோல் போஸ்ட் அருகே ஓடுவதற்குள், ஸ்டீபன் கிக் செய்து அடித்த பந்து கோல் போஸ்ட்டிற்குள்ளேயே சென்றிருந்தது. ஆம் அது கோலாகவே மாறிவிட்டது. ஒருபுறம் இது அங்கு சூழ்ந்திருந்த மக்களுக்கோ, இல்லை எதிரணியினருக்கோ மட்டுமல்லாமல் ஸ்டீபனிற்கும் கூட அது நம்பமுடியாத வகையில் தான் இருந்தது. ஒரு கணம் ஸ்டேடியத்தில் கூடியிருந்த அத்தனை பேரையும் ஸ்தம்பிக்க வைத்து விட்டார் ஸ்டீபன் ஹம்ப்ரிஸ்.

உண்மையில் கோலடித்த பிறகு நான் என்னை மறந்து ஒரு மயக்க நிலைக்கே சென்று விட்டேன் - ஸ்டீபன்!

நம்பமுடியாத வரலாற்று கோலடித்ததிற்கு பிறகு பேசிய ஸ்டீபன், ”பந்து என் காலில் இருந்து சென்ற போது, எனக்குள் ”பந்து கோலுக்கு செல்ல ஒரு வாய்ப்பிருக்கிறது” என்று தோன்றியது.

பந்து கோலாக மாறிய பிறகு, எனக்கு அதை கொண்டாட எங்கு செல்வது என்றே தெரியவில்லை, ஏனென்றால் நான் இதற்கு முன் கிரவுண்டின் நடுவிலிருந்து கோலடித்ததே இல்லை. என்னால் அதை நம்ப முடியவே இல்லை, நான் என்னை மறந்து ஒரு மயக்க நிலைக்கே சென்று விட்டேன்” என்று கூறினார்.

ஸ்டீபன் ஹாம்ப்ரிஸ் ஒரு சப்ஸ்டியூட் வீரராக தான் உள்ளே வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது ஸ்டீபன் அடித்த அந்த கோலை கால்பந்து உலகம் கொண்டாடி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com