ரஷ்யாவில் 21 ஆவது பிஃபா கால்பந்தாட்டப் போட்டிகள் எனும் கொண்டாட்டம் ஒரு வழியாக முடிவடைந்தது. இந்த உலகக் கோப்பையை பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி கைபற்றியது. ஜூன் 14 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பையில் உலகப் புகழ்பெற்ற வீரர்கள் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் விரைவில் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டனர்.
இதனால் இந்தாண்டு உலகக் கோப்பை போட்டியில் அதிகம் கோலடித்த வீரருக்கு கொடுக்கப்படும். "கோல்டன் பூட்" விருது யாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வந்த நிலையில். இந்த உலகக் கோப்பைக்கான "கோல்டன் பூட்" விருது இங்கிலாந்து அணியின் கேப்டனும், அதிக கோலடித்த ஹாரி கேனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் 1982 ஆம் ஆண்டு கோல்டன் பூட் என அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விருது 2010 ஆம் ஆண்டு முதல் கோல்டன் பூட் (Golden Boot) என மாற்றம் பெற்றது. ஆனாலும் தொடர்ந்து கோல்டன் ஷூ விருது என்றே அழைக்கப்படுகிறது. மேலும் உலகக் கோப்பை தொடரில் கோலடிக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடிக்கும் வீரர்களையும் தேர்வு செய்து வெள்ளி பூட் மற்றும் வெண்கல பூட் விருதுகளும் வழங்கப்படுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட வீரர்கள் ஒரே அளவான கோல்கள் பெற்றிருந்தால் 1994 ஆம் ஆண்டு முதல் பெனால்டி கோல்கள் நீக்கப்பட்டு கணக்கெடுக்கப்படும். அவ்வாறு பெனால்டி கோல்களும் இல்லாத நிலையில் கோல்களுக்காக வழங்கப்பட்ட உதவிகளின் (Assist) எண்ணிக்கை கணக்கிடப்படும்.
அவற்றிலும் சமனாக இருக்கும் சந்தர்ப்பத்தில் குறைந்த நேரம் விளையாடிய வீரருக்கு விருது கோல்டன் பூட் வழங்கப்படும். இம்முறைமை 2006 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 2014 ஆம் ஆண்டு இவ்விருதை கொலம்பிய அணியின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரொட்ரிகேஸ் பெற்றிருந்தார்.
இந்தாண்டு அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் இப்போதுவரை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் 6 கோல்களுடன் முதலிடத்திலும், பெல்ஜியம் அணியின் ரோமலு லுகாகு இரண்டாம் இடத்திலும் இருந்தனர். இந்நிலையில் பெருமைமிகு கோல்டன் பூட் விருதை ஹாரி கேன் வென்றார்.