இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், டிஎஸ்பியாக பதவி ஏற்க உள்ளார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன், ஹர்மன்பிரீத் கவுர். பஞ்சாபைச் சேர்ந்த இவர், இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 171 ரன்கள் விளாசி இந்திய அணி பைனலுக்கு செல்ல உதவினார். இதை கவுரவிக்கும் விதமாக இவருக்கு டிஎஸ்பி பதவி வழங்குவதாக பஞ்சாப் முதல் அம்ரிந்தர் சிங் தெரிவித்தார்.
மேற்கு ரயில்வேயில் அதிகாரியாக இருக்கும் கவுர், அங்குள்ள ஒப்பந்தத்தை மீறி இந்தப் பணியில் சேர முடியாமல் இருந்தது. இப்போது ரயில்வே நிர்வாகம் அவரை விடுவிக்க முன் வந்துள்ளதால், அவர் டிஎஸ்பி ஆக இருக்கிறார்.
தற்போது தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பெண்கள் டி20 தொடரில் பங்கேற்றுள்ள ஹர்மன்பிரீத் கவுர், வரும் 1-ம் தேதி இந்தப் பதவியை ஏற்க உள்ளார். அவரது சொந்த மாவட்டமான மொகாவில் அவர் பணியாற்ற இருக்கிறார்.