செரீனாவை வீழ்த்தி முதல் விம்பிள்டன் பட்டம் வென்ற ஹாலேப்

செரீனாவை வீழ்த்தி முதல் விம்பிள்டன் பட்டம் வென்ற ஹாலேப்
செரீனாவை வீழ்த்தி முதல் விம்பிள்டன் பட்டம் வென்ற ஹாலேப்
Published on

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை ரூமேனியாவின் சிமோனா ஹாலேப் தட்டிச் சென்றுள்ளார். 

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் ரூமேனியாவின் சிமோனா ஹாலேப் விளையாடினர். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிமோனா ஹாலேப் 6-2,6-2 என்ற நேர் சேட்களில் செரீனா வில்லியம்சை வீழ்த்தினார். இதன்மூலம் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை ரூமேனியாவின் சிமோனா ஹாலேப் வென்றுள்ளார். 

வெறும் 56 நிமிடங்களே நீடித்த இந்தப் போட்டியில் பலம் வாய்ந்த செரீனா வில்லியம்சை தோற்கடித்தார் ஹாலேப். இது ஹாலேப் டென்னிஸ் வாழ்க்கையில் பெறும் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இந்தப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றிப் பெற்றியிருந்தால் அவர் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்திருப்பார். ஆனால் இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் செரீனா இந்த வாய்ப்பை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com