கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், அடுத்த சில வாரங்களில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் துபாயில் ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் காரத்திக் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன் கிறிஸ் லின்னை அணியிலிருந்து விடுவித்ததற்கான காரணத்தை அந்த அணியின் வலைதளத்தில் ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்…
‘கிறிஸ் லின்னை கனத்த இதயத்துடன் தான் கிறிஸ் லின்னை அணியிலிருந்து விடுவித்தோம். அவர் அபாரமான வீரர். ஏல நடைமுறையில் நாம் சில வீரர்களை அணியிலிருந்து விடுவித்தாக வேண்டிய நிர்பந்தம் எழுகிறது.
இருப்பினும் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் அணியில் இணைந்திருப்பது பேட்டிங் ஆர்டரில் புது தெம்பை கொடுத்துள்ளது. அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இங்கிலாந்து தான் இப்போது சாம்பியன்’ என்று சொல்லியுள்ளார் தினேஷ் கார்த்திக்.
கிறிஸ் லின் இப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.