உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வரவேற்கும் விதமாக பிரேசில் நாட்டில் உள்ள சாலைகள், சுவர்கள் வண்ணமயமாகி வருகிறது.
உள்ளூர் ஓவியக் கலைஞரான புருனோ டோஸ் சாண்டோஸ் என்பவர் சாலைகள், நடைபாதைகள், சுவர்களை பல வர்ண ஸ்பேரே மூலம் ஓவியங்களை தீட்டி வருகிறார். பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் வேடிக்கையான ஓவியத்தை நடைபாதையில் தீட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சாண்டோஸின் கைவண்ணத்தால் அந்நாட்டு தேசியக்கொடியின் வர்ணத்தில் நடைபாதைகள் ஜொலிக்கின்றன. கடந்த உலகக் கோப்பையில் போட்டியின் அரையிறுதியில் ஜெர்மனி அணியிடம் ஏழுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி தோல்வியடைந்தது. புதிய பயிற்சியாளராக லியானார்டோ பாச்சி (BACCHI) நியமிக்கப்பட்ட பின்னர் பிரேசில் அணி 20 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்தது. இதனால் இம்முறை பிரேசில் அணி உலகக் கோப்பையில் வெற்றி பெறும் என அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.