தியோதர் டிராபி: இறுதிப் போட்டியில் இந்திய சி அணி!

தியோதர் டிராபி: இறுதிப் போட்டியில் இந்திய சி அணி!
தியோதர் டிராபி: இறுதிப் போட்டியில் இந்திய சி அணி!
Published on

தியோதர் டிராபிக்கான இறுதிப் போட்டியில் இந்தியா பி மற்றும் சி அணிகள் மோதுகின்றன.

தியோதர் டிராபிக்கான உள்ளூர் ஒரு நாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது. இத்தொடரில் நேற்று முன் தினம் நடந்த லீக் போட்டியில் இந்தியா ஏ -பி அணிகள் மோதின. இதில் பி அணி வெற்றி பெற்றது.

ராஞ்சியில் நேற்று நடந்த போட்டியில், விஹாரி தலைமையிலான இந்தியா ஏ மற்றும் சுப்மான் கில் தலைமையிலான இந்தியா சி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய சி அணி, அபாரமாக ஆடி, 3 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வாலும் சுப்மான் கில்லும் இந்திய ஏ அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். மயங்க் அகர்வால் 111 பந்துகளில் 120 ரன்களும் சுப்மான் கில் 143 ரன்களும் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இந்திய ஏ அணி 29.5 ஓவர்களில் 134 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சி அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


2-வது தோல்வியை சந்தித்த ஏ அணி வெளியேற்றப்பட்டது.  சி அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜலஜ் சக்சேனா 41 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தியோதர் கோப்பை தொடரில் ஒரு பவுலரின் சிறந்த பந்து வீச்சு இது.

இன்று நடக்கும் 3-வது லீக்கில் இந்தியா சி- பி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் வரும் 4- ஆம் தேதி இறுதிப்போட்டியில் மீண்டும் சந்திக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com