ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பில்லையா? கங்குலி ஆச்சரியம்!

ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பில்லையா? கங்குலி ஆச்சரியம்!
ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பில்லையா? கங்குலி ஆச்சரியம்!
Published on

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மா சேர்க்கப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட ர், 5 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் அந்த அணி பங்கேற்கிறது. அடுத்த மாதம் 4 ஆம் தேதி, முதல் டெஸ்ட் போட்டி, தொடங்குகிறது. அக்டோபர் 21 ஆம் தேதி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கி, நவம்பர் 1 ஆம் தேதி வரை நடக்கிறது. மூன்று போட் டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 4 ஆம் தேதி தொடங்குகிறது.

இதில் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தவான், ரோகித் சர்மா, இங்கிலாந்து தொடரில் இருந்து நீக்கப்பட்ட முரளி விஜய் இடம்பெறவில்லை. வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால், முகமது சிராஜ்  சேர்க்கப்பட்டுள்ளனர்.

அணி விவரம்: விராத் கோலி (கேப்டன்), கே.எல். ராகுல், பிருத்வி ஷா, மயங்க், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), விஹாரி, ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, குல்தீப், முகமது ஷமி, உமேஷ்யாதவ், முகமது சிராஜ், ஷர்துல்.

இந்நிலையில் ரோகித் சர்மா சேர்க்கப்படாதது குறித்து ஆச்சரியம் அடைந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இதுபற்றி அவர், ’ஆசியக் கோப்பை வென்றதற்கு வாழ்த்துகள் ரோகித். நீங்கள் விதிவிலக்கானவர். ஒவ்வொரு முறையும் டெஸ்ட் அணியில் உங்கள் பெயர் இடம்பெறாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் இடம்பெறுவது அதிக தூரத்தில் இல்லை’ என்று தெரிவித் துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com