விண்டேஜ் லேண்ட் ரோவர் காரை வாங்கியுள்ள மகேந்திர சிங் தோனி! வைரலாகும் புகைப்படங்கள்

விண்டேஜ் லேண்ட் ரோவர் காரை வாங்கியுள்ள மகேந்திர சிங் தோனி! வைரலாகும் புகைப்படங்கள்
விண்டேஜ் லேண்ட் ரோவர் காரை வாங்கியுள்ள மகேந்திர சிங் தோனி! வைரலாகும் புகைப்படங்கள்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கிரிக்கெட் விளையாட்டை தாண்டி மிகவும் பிடித்த விஷயம் என்றால் அது வாகனங்கள்தான். அவரது ராஞ்சி பண்ணை வீட்டில் அமைந்துள்ள கராஜில் பழங்கால விண்டேஜ் கார்கள் தொடங்கி பிராண்ட் நியூ கார்கள், பைக்குகள் என ரகம் ரகமாக வாகனங்கள் அலங்கரித்து நிற்கின்றன. 

அதில் புது வரவாக இணைக்கிறது விண்டேஜ் லேண்ட் ரோவர் 3 ஸ்டேஷன் வேகன் கார். இந்த கார் கடந்த 1971-இல் உருவாக்கப்பட்டது. இதனை ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஏலத்தில் தோனி வாங்கியுள்ளார். 1971 முதல் 1985 வரையிலான காலகட்டத்தில் வெளியான லேண்ட் ரோவர் கார்களில் இந்த 3 ஸ்டேஷன் வேகன் கார் மிகவும் பிரபலம் என சொல்லப்பட்டுள்ளது. 

இந்த கார் உற்பத்தி செய்யப்பட்ட போது இரண்டு விதமான எஞ்சினை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2.3 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் முதல் 3.5 லிட்டர் V8 4 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 2 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்ஃபர் கேஸை இந்த கார் கொண்டிருந்துள்ளது. இதில் தோனி வாங்கியுள்ள காரில் என்ன எஞ்சின் உள்ளது என்பது தெரியவில்லை. மஞ்சள் நிற வண்ணம் கொண்டுள்ளது இந்த கார். 

ஹம்மர் எச்2, ஜிஎம்சி சியரா பிக்-அப் டிரக், போர்ஸ் பாக்ஸர், ஃபெராரி 500 ஜிடிஓ, ஆடி க்யூ7, மஹிந்திரா ஸ்கார்பியோ, ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ், கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக் மற்றும் நிசான் ஜோங்கா கார்களை தோனி தற்போது வைத்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com