“டிம் பெய்ன் கேப்டன் பொறுப்புக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்” - சுனில் கவாஸ்கர்!

“டிம் பெய்ன் கேப்டன் பொறுப்புக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்” - சுனில் கவாஸ்கர்!
“டிம் பெய்ன் கேப்டன் பொறுப்புக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்” - சுனில் கவாஸ்கர்!
Published on

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் அந்த பொறுப்பில் நீண்ட நீடிப்பது கடினம் என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். அவர் கேப்டன் பொறுப்புக்கான நாட்களை எண்ணிக் கொண்டுள்ளார்  எனவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க தொடரில் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் பெய்ன். 

“எனக்கு தெரியவில்லை. நான் ஆஸ்திரேலிய அணியின் தேர்வு குழுவிலும் இல்லை. ஆனால் டிம் பெய்ன் கேப்டனாக தொடருவது கடினம் தான். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. அற்புதமான பவுலிங் யூனிட்டை வைத்துக் கொண்டு இந்தியாவை 130 ஓவர்கள் வரை விக்கெட் வீழ்த்தாமல் ஆட விட்டது கேப்டனின் தவறு தான். 

அவர் வீரர்களை ஃபீல்டிங்கில் பிளேஸ் செய்வதற்கு பதிலாக கிரீஸில் இருக்கும் பேட்ஸ்மேன்களுடன் பேசுவதிலேயே நேரத்தை செலவிட்டார். அதானல் அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. 2 - 1 என தொடரில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்க வாய்ப்பிருந்தும் அதை மழுங்கடித்தது பெய்ன் தான்” என கவாஸ்கர் சொல்லியுள்ளார். 

22 டெஸ்ட் போட்டிகளில் 11 வெற்றி, 7 தோல்வி மற்றும் 4 டிரா என ஆஸ்திரேலிய  அணியை கேப்டனாக பெய்ன் வழிநடத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்ஸில் பெய்ன் டிராப் செய்த கேட்ச்களையும் கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com