சென்னையில் பொதுமுடக்கத்தை மீறியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங்கின் காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னை திருவான்மியூர் சந்திப்பில் கடந்த 20ம் தேதி முழு பொதுமுடக்கம் காரணமாக போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆல் ரவுண்டர் ராபின்சிங், தனது காரில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்துள்ளார். அவரை மடக்கிய திருவான்மியூர் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் குமார் என்பவர் இ-பாஸ் இருக்கிறதா என கேட்டுள்ளார்.
அதற்கு ராபின் சிங் ஆங்கிலத்தில் பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதில் சிறப்பு உதவி ஆய்வாளருக்கும் ராபின் சிங்கிற்கும் மொழி புரிதலில் சற்று முரண்பாடுகள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இ-பாஸ் இல்லாததால் அவரது காரை பறிமுதல் செய்த போலீஸார், பொதுமுடக்கம் நேரத்தில் வெளியில் வந்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.