இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தினார்.
லீக் சுற்றோடு சென்னை அணி தொடரிலிருந்து வெளியேறியது. ரசிகர்களுக்கும் அது தான் தோனியை அண்மையில் லைவாக பார்த்த தருணமாக இருந்தது. தல என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் தோனி அடுத்த ஐபிஎல் சீசனில் தான் லைவ் ஆக்ஷனுக்கு திரும்புவார் என்பதால் அவரை காண ரசிகர்கள் ஏங்கியிருந்த நிலையில் தனது தரிசனத்தை கொடுத்துள்ளார் தோனி.

Dance Time ?❤️ @msdhoni | @SaakshiSRawat #MSDhoni #Dhoni #SakshiDhoni pic.twitter.com/3w43KGU9VI
— msd7.7.8.1 (@MSDhonism7) November 26, 2020

கோட் சூட் போட்டுள்ள தோனி, மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஷிவாவுடன் பின்னணியில் ஒலிக்கப்படும் இசைக்கு ஏற்ப நடனமாடுகிறார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோ ஏதோ ஒரு சுப நிகழ்ச்சியின் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது.

After so long ?❤️#MSDhoni • @MSDhoni • #Dhoni pic.twitter.com/xQJNvq70li
— Sam☺ (@SamLoveDhoni) November 26, 2020