இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் டொமஸ்டிக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் இந்திய அணிக்காக 2006 முதல் 2011 வரை விளையாடியவர். கிரிக்கெட் திறனுக்காக ஸ்ரீசாந்த் பேசப்பட்டதை விட சர்ச்சை குறித்து அதிகம் பேசப்பட்டவர். ஸ்பாட் ஃபிக்ஸிங் புகாரில் சிக்கி 7 ஆண்டுகள் தடையை எதிர்கொண்டவர்.
தடை முடிந்த கையோடு டொமஸ்டிக் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார். கேரள அணிக்காக கடந்த பிப்ரவரியில் மெகாலயா அணிக்கு எதிராக ரஞ்சிக் கோப்பையில் விளையாடி இருந்தார். அந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்த நிலையில் டொமஸ்டிக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியவர். 74 முதல் தர போட்டி, 92 லிஸ்ட் ஏ போட்டி மற்றும் 63 டி20 போட்டிகளில் விளையாடியவர் ஸ்ரீசாந்த்.
“அடுத்த தலைமுறையை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் நலன் கருதி எனது முதல் தர கிரிக்கெட் கெரியரை இத்துடன் முடித்துக் கொள்ள நான் முடிவு செய்துள்ளேன்” என ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.