“இந்தியா - இங்கி. டெஸ்ட் தொடரை 'டெண்டுல்கர் - குக்' கோப்பை என மாற்றுங்கள்” - பனேசர்

“இந்தியா - இங்கி. டெஸ்ட் தொடரை 'டெண்டுல்கர் - குக்' கோப்பை என மாற்றுங்கள்” - பனேசர்
“இந்தியா - இங்கி.  டெஸ்ட் தொடரை  'டெண்டுல்கர் - குக்' கோப்பை என மாற்றுங்கள்” - பனேசர்
Published on

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை ‘டெண்டுகர் - குக் கோப்பை’ என மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். இருவரும் அவரவர் விளையாடிய நாடுகளுக்காக அதிக ரன்களை குவித்தவர்கள் எனவும் ட்வீட் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

தற்போது இங்கிலாந்து அணி இந்தியாவில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் Anthony de Mello கோப்பை என அழைக்கப்படுகிறது. அதுவே இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடினால் அது Pataudi கோப்பை என சொல்லப்படுகிறது. இதில் தான் மாற்றம் வேண்டுமென பனேசர் தெரிவித்துள்ளார்.

“இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை ‘டெண்டுகர் - குக் கோப்பை’ என மாற்ற வேண்டும். இருவரும் அவரவர் விளையாடிய நாடுகளுக்காக அதிக டெஸ்ட் ரன்களை குவித்தவர்கள். டெண்டுல்கர் மாதிரியான கிரிக்கெட் லெஜெண்ட் பெயரில் இந்த தொடர் நடத்தப்பட வேண்டும். 

கோலி தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை. ரஹானே தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ளதால் கோலி இப்போது அழுத்தத்தில் உள்ளார். அடுத்த போட்டியில் இந்தியா தோல்வியை தழுவினால் அவர் அந்த பதவியிலிருந்து விலக வேண்டியிருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com