“அன்றைய தினம் தவறு செய்தது நான் தான்” என முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் இயன் பெல், முன்னாள் இந்திய கேப்டன் தோனி உடனான 'ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்' ரன் அவுட்டின் மலரும் நினைவுகளை ரீவைண்ட் செய்துள்ளார்.
என்ன நடந்தது?
2011 நாட்டிங்கமில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இயன் பெல் ரன் அவுட்டில் ஏற்பட்ட மாறுபட்ட கருத்தினால் முதலில் அவர் அவுட் என அறிவிக்கப்பட்டார். அப்போது அவர் 137 ரன்களை எடுத்திருந்தார். இருப்பினும் அவர் மீண்டும் விளையாட அப்போதைய இந்திய கேப்டன் தோனி அழைத்திருந்தார். இந்த சம்பவம் தேநீர் இடைவேளைக்கு முன்பான கடைசி பந்தில் நடந்திருந்தது.
“அது மிகவும் சுவாரஸ்யம் மிகுந்த அனுபவம். நான் அப்போது பசியாக இருந்தேன். பந்து பவுண்டரி லைனை கடந்திருக்கும் என நான் கருதினேன். அதோடு நான் அப்போது பசியாக இருந்ததாகவும் நினைவு. அதனால் பெவிழியனுக்கு திரும்புவதில் குறியாக இருந்தேன். நல்ல வேளையாக நான் தப்பிப் பிழைத்தேன். தோனியின் அந்த செயலுக்காக தசாப்தத்தின் சிறந்த ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது அவருக்கு கிடைத்தது. ஆனால் தவறு என்னுடையது தான். அன்று நான் அப்படி செய்திருக்க கூடாது” என பெல் தெரிவித்துள்ளார்.