“மாற்றம் ஒரே இரவில் ஏற்படாது”- இனவெறி குறித்து குமார் சங்கக்கரா கருத்து 

“மாற்றம் ஒரே இரவில் ஏற்படாது”- இனவெறி குறித்து குமார் சங்கக்கரா கருத்து 
“மாற்றம் ஒரே இரவில் ஏற்படாது”- இனவெறி குறித்து குமார் சங்கக்கரா கருத்து 
Published on

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கரா இனவெறி தொடர்பாக தனது கருத்தை அண்மையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இனவெறி சர்ச்சையால் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதும் ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ என்ற இயக்கத்தின் மூலமாக இனவெறிக்கு எதிராக தங்களது கண்டனங்களை உலக மக்கள் பகிர்ந்து வருகின்றனர். 

இந்த சூழலில் ஆன்லைன் வீடியோ சேட் மூலம் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுடனான கலந்துரையாடலில் இனவெறி குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார் சங்கக்கரா.

“இனவெறி பாகுபாடு என்பது தோல் நிறத்தினை மட்டுமே அடிப்படையாக கொண்டில்லாமல் வேறு சில வழிகளிலும் அரங்கேற வாய்ப்புகள் உள்ளன. அதனை களைய ஒவ்வொருவரும் அது சார்ந்து பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதன் மூலம் மனதையும் திறக்கலாம். இந்த மாற்றம் எல்லாம் ஒரே இரவில் நடந்து விடாது. குறிப்பாக இதனை குழந்தைகளிடத்தில் பரவலாக கொண்டு செல்வது அவசியம்.  மாற்றம் ஒரே இரவில் ஏற்படாது” என அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com