புஜாராவிற்கு எதிராக இங்கிலாந்து அணியின் ஃபீல்டிங் செட்டப் - கேலி செய்த மார்க் வாஹ்

புஜாராவிற்கு எதிராக இங்கிலாந்து அணியின் ஃபீல்டிங் செட்டப் - கேலி செய்த மார்க் வாஹ்
புஜாராவிற்கு எதிராக இங்கிலாந்து அணியின் ஃபீல்டிங்  செட்டப் - கேலி செய்த மார்க் வாஹ்
Published on

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றுள்ளது.

இந்நிலையில் சென்னை டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டத்தின் கடைசி செக்ஷனில் புஜாராவிற்கு எதிராக இங்கிலாந்து அணியின் ஃபீல்டிங் பிளேஸ்மெண்டை தான் கேலி செய்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மார்க் வாஹ். 

“இந்த ஃபீல்டிங் குறித்து யாரேனும் என்னுடன் பேச முடியுமா? ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்தியா 385 ரன்களை எடுத்தாக வேண்டும். அதுவும் புஜாரா ஸ்ட்ரைக்கில் உள்ளார். எதிர்முனையில் டாம் பெஸ் பந்து வீசுகிறார்” என மார்க் வாஹ் ட்வீட்செய்துள்ளார். 

அவர் இங்கிலாந்து அணி பவுண்டரி லைனில் நிறுத்தியிருந்த ஃபீல்டர்களை குறித்து தான் கமெண்ட் செய்துள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com