ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: ஜோர்டானை வீழ்த்தி கத்தார் மீணடும் சாம்பியன்!

ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஜோர்டானை வீழ்த்தி கத்தார் அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
ஆசிய கோப்பை கால்பந்து தொடரை வென்றது கத்தார்
ஆசிய கோப்பை கால்பந்து தொடரை வென்றது கத்தார்pt desk
Published on

கத்தாரில் உள்ள லூசாயில் கால்பந்து மைதானத்தில் ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. முதல் முறையாக ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜோர்டான் அணி, கத்தார் அணியுடன் மோதியது.

Qatar vs Jordan
Qatar vs Jordanpt desk

விறு விறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியில், கத்தார் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில், ஜோர்டான் அணி வீரர் Tazba Al-inamat முதல் கோல் அடித்தார். இதனைத் தொடர்ந்து கிடைத்த பெனால்டி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட கத்தார் அணி வீரர் AkramAfif, இரண்டு கோல்களை அடித்து அணியை வெற்றிபெற செய்தார்.

ஆசிய கோப்பை கால்பந்து தொடரை வென்றது கத்தார்
கோலி இல்லை, ஷ்ரேயாஸ் வெளியே, ராகுல் & ஜடேஜா சந்தேகம் - என்ன தான் நடக்குது..?

இதையடுத்து 3க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற கத்தார் அணி, சாம்பியன் பட்டத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம் ஜப்பான் அணிக்கு பிறகு அடுத்தடுத்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை கத்தார் அணி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் அடுத்த போட்டி 2027ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com