சிறந்த கால்பந்து வீரர்: 8 வது முறையாக BALLON D'OR விருதை வென்ற மெஸ்ஸி

சர்வதேச கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பலான் டி ஓர் (BALLON D'OR) அறிவிக்கப்பட்டது. சிறந்த வீரருக்கான விருதை 8 வது முறையாக வென்று அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸி சாதித்துள்ளார்.
Messi
Messipt desk
Published on

கிளப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய மெஸ்ஸி, கால்பந்து உலகக் கோப்பையை தனது தாய் நாட்டுக்காக வென்று அசத்தினார். உலக கோப்பையில் சிறந்த வீரர் என்ற விருதையும் பெற்ற அவர், இந்தாண்டு பலான் டி ஓர் விருதையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

Lionel Messi
Lionel MessiTwitter

இதன்மூலம் 8 வது முறையாக பலான் டி ஓர் விருது பெறும் கால்பந்து வீரர் என்ற சாதனையும் அவர் வசம் சென்றது. சிறந்த கோல் கீப்பருக்கான விருதை அர்ஜென்டினா அணியைச் சேர்ந்த எமிலியானோ மார்டினஸ் வென்றார். இவர் உலகக் கோப்பையில் சிறந்த கோல்கீப்பர் விருதை வசப்படுத்தியவர் ஆவார்.

Messi
ஐரோப்பிய கிளப் அணிகளுக்காக அதிக கோல்... ரொனால்டோவின் சாதனையை அசால்ட்டாக முறியடித்த மெஸ்ஸி!

மகளிருக்கான பலான் டி ஓர் விருது ஸ்பெயின் வீராங்கனை ஐடனா பொன்மாடிக்கு (AITANA BONMATI) அறிவிக்கப்பட்டது. சிறந்த இளம் வீரருக்கான விருதுக்கு இங்கிலாந்து அணியின் ஜூட் பெல்லிங்கம் ( JUDE BELLINGHAM ), அதிக கோல் அடித்த வீரருக்கான விருதுக்கு நார்வே வீரர் எர்லிங் ஹாலண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

messi
messipt desk

ஆடவர் பிரிவில் சிறந்த கிளப் அணி விருதை மான்செஸ்டர் சிட்டி அணியும், மகளிர் பிரிவில் பார்சிலோனா அணியும் வென்றன. கால்பந்து உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது பலான் டி ஓர் விருது பிரான்ஸ் கால்பந்து சங்கத்தால் ஆண்டு தோறும் வழங்கப்படும். சில ஆண்டுகள் மட்டும் ஃபிஃபாவுடன் இணைந்து வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு மீண்டும் பிரான்ஸ் கால்பந்து சங்கம் மூலம் மட்டுமே வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com