கைகூடிய கூடுதல் நேரம்.. வாகை சூடிய மெஸ்ஸியின் படை.. உருகுவேயின் சாதனையை முறியடித்த அர்ஜென்டினா!

தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான கோபா அமெரிக்க கோப்பை கால்பந்தில் அர்ஜென்டினா அணி புதிய வரலாறு படைத்தது.
அர்ஜென்டினா
அர்ஜென்டினாபுதிய தலைமுறை
Published on

தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான கோபா அமெரிக்க கோப்பை கால்பந்தில் அர்ஜென்டினா அணி புதிய வரலாறு படைத்தது.

16 ஆவது முறை வாகை சூடி அந்த அணி முத்திரை பதித்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோபா அமெரிக்க கோப்பை போட்டியின் இறுதியாட்டம் அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் களைகட்டியது. இறுதிப்போட்டியில் கொலம்பிய அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாடியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சி பலிக்கவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இதே நிலையே நீடித்தது. இதனையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினா அணியின் மாற்றுவீரராக களமிறங்கிய லாரட்டோ மார்டினஸ் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார். இதன்பின்னர் கொலம்பிய அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. முடிவில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

அர்ஜென்டினா
பான்டிங்கை நீக்கிய கங்குலி... எப்படியிருந்த கங்குலி..?

இந்த வெற்றியை அந்த அணியின் வீரர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். கோபா அமெரிக்கா தொடரில் 15 முறை பட்டங்கள் வென்று உச்சத்தில் இருந்த உருகுவேயை, அர்ஜென்டினா தற்போது பின்னுக்குத் தள்ளியது. கோப்பையை தக்க வைத்ததுடன் கோபா அமெரிக்காவில் 16 ஆவது பட்டத்தை வென்று அர்ஜென்டினா அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com