குமரி மாவட்டம் கடையாலுமூடு மலையோர கிராமத்தை சேர்ந்த சமீஹா பர்வீன். இந்த 18 வயது மாற்று திறனாளி மாணவி இந்த மாதம் 23-ம் தேதி போலந்து நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்பதற்காக, டெல்லியில் நடைபெற்ற தகுதி போட்டியில் கலந்துக்கொண்டிருந்தார். அதில் வெற்றி பெற்றும், அந்த மாணவிக்கு போலந்து போட்டியில் பங்கேற்க இந்திய விளையாட்டு ஆணையம் மறுப்பு தெரிவித்தது. இதை எதிர்த்து, மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், இந்த மாணவியை போலந்து நாட்டில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க வைக்க இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு இன்று உத்தரவிட்டார்.