’600 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை’ - மீண்டுவருவேன் என சொல்லியடித்த ஆண்டர்சன் 

’600 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை’ - மீண்டுவருவேன் என சொல்லியடித்த ஆண்டர்சன் 
’600 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை’ - மீண்டுவருவேன் என சொல்லியடித்த ஆண்டர்சன் 
Published on

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற மைல் கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்திருப்பவர்கள் இலங்கையின் முரளிதரன் (800), ஆஸ்திரேலியாவின் வார்னே (708) மற்றும் இந்தியாவின் கும்ப்ளே (619) ஆகிய சுழற் பந்து வீச்சாளர்கள் தான். 

இந்த வரிசையில் முதல் வேகப்பந்து வீச்சாளராக இணைந்துள்ளார் ஆண்டர்சன். பாகிஸ்தானின் ஆசார் அலி அவரது 600 வது விக்கெட்டாக வீழ்ந்துள்ளார்.

2003 இல் தனது டெஸ்ட் கரியரை ஆரம்பித்த ஆண்டர்சன் சுமார் 17 ஆண்டுகள் ஆக்டிவாக கிரிக்கெட் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார். 

பொதுவாகவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் காயங்களுக்கும் பொருத்தம் பஞ்சும் நெருப்புமாக ஒட்டிக் கொள்ளும். இருப்பினும் காயத்தினால் பல வலிகளை கடந்து இந்த சாதனையை அவர் எட்டியுள்ளார்.

பாகிஸ்தான் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்திய ஆண்டர்சனை ‘ஒய்வு எடுத்து கொள்ளுங்கள்’ என பலரும் விமர்சனம் செய்தனர்.

‘தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த வாரம் வெறுமையாக அமைந்துவிட்டது. நான் நன்றாக பந்து வீசாதது தான் காரணம். அநேகமாக பத்து ஆண்டுகளில் முதல்முறையாக, களத்தில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதாக கருதுகிறேன். 

அடுத்து வரும் நாட்களில் கடுமையாக உழைத்து இழந்த பார்மை மீட்டெடுப்பேன். கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு என்னிடம் தெம்பு இருக்கிறது என்பதை எனது ஆட்டத்தின் மூலம் மக்களுக்கு உணர்த்துவேன்’ என ஆண்டர்சன் தெரிவித்திருந்தார்.

அவர் சொன்னது போலவே அதை அடுத்தடுத்த ஆட்டங்களில் செய்தும் காட்டினார் ஆண்டர்சன். 

தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் மொத்தமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவர். 

38 வயதான ஆண்டர்சன் இதுவரை 156 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 

‘இங்கிலாந்து மண்ணில் ஆண்டர்சன்னின் பந்துவீச்சு வேற லெவல்’ என கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com