சேப்பாக்கம் மைதானத்தில் நுழைந்த தீயணைப்பு வாகனங்கள்

சேப்பாக்கம் மைதானத்தில் நுழைந்த தீயணைப்பு வாகனங்கள்
சேப்பாக்கம் மைதானத்தில் நுழைந்த தீயணைப்பு வாகனங்கள்
Published on

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்குள் முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வண்டிகள் சென்றுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தப் போராட்டத்தை திசைத் திருப்பக்கூடும் என்பதால் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராகவும் போராட்டங்கள் கிளம்பியுள்ளன. இதனால் சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில், எந்த அசம்பாவிதமும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதில் போலீஸார் விழிப்புடன் உள்ளனர். 

பாதுகாப்பு கருதி, ஐபிஎல் போட்டியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. பேக், சூட்கேஸ்கள், செல்போன்கள், ரிமோட்டில் இயங்கும் கார் சாவி, கேமரா, சிகரெட், தீப்பெட்டி, பட்டாசுகள், கறுப்பு துணிகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து ரசிகர்களிடம் எழும்பிய எதிர்ப்பின் காரணமாக செல்போன்களை மட்டும் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இவை ஒருபுறம் இருக்க சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார் ஈடுபடவுள்ளனர். 13 காவல் துணையாளர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்படவுள்ளனர். 7 கூடுதல் துணை ஆணையர்கள், 29 உதவி ஆணையர்கள், 100 ஆய்வார்கள் கண்காணிப்பு மேற்கொள்கின்றனர். அத்துடன் சேப்பாக்கம் மைதானத்திற்கு கமாண்டோ பாதுகாப்பும் அளிக்கப்படவுள்ளது. இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்திற்குள் முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வண்டிகள் சென்றுள்ளன. அத்துடன் போலீசார் ரோந்து வாகனம் மூலமாக, விக்டோரியா சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை எடுத்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். ஏதேனும் தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவே தற்போது தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. போலீஸாரின் குவிப்பு, சாலைகளின் வழிமாற்றம், தீயணைப்பு வாகனங்கள் என சேப்பாக்கம் பகுதி பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக சாமானிய மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com