டி20 போட்டிக்கான வீரர்களின் தரவரிசைப்பட்டியலில் இந்திய வீரர் கே.எல். ராகுல் முதன்முறையாக மூன்றாவது இடத்துக்கு முன்னேறியு ள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஜிம்பாப் வேயில் நடந்த முத்தரப்பு தொடரில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 172 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய அணி கேப் டன் ஆரோன் பின்ச் முதலிடத்தை பிடித்துள்ளார். அதே முத்தரப்பு தொடரில் 278 ரன்கள் சேர்த்த பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 44 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தைப் பெற்றுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அதிரடி சதம் விளாசிய இந்திய வீரர் கே.எல் ராகுல் 9 இடங்கள் முன்னேறி முதன் முறையாக, 3-வது இடத்துக்கு வந்துள்ளார். நியூசிலாந்து வீரர் காலின் முன்ரோ, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முறையே 4-வது மற்றும் 5-வது இடத்துக்கு இறங் கியுள்ளனர். ரோகித் சர்மா 11-வது இடத்திலும், விராத் கோலி 12-வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், பாகிஸ்தான் வீரர் சதாப் கான், நியூசிலாந்து வீரர் சோதி, இந்திய வீரர் சேஹல், வெஸ்ட்இண்டீஸ் வீரர் சாமுவேல் பத்ரீ ஆகியோர் முறையே முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளனர்.
அணிகளின் தரவரிசையில், பாகிஸ்தான் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் முறையே மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடங்களைப் பிடித்துள்ளன.