உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்கநாள் ஆட்டத்தில் கத்தார் அணியை வீழ்த்தி ஈகுவடார் அணி வெற்றியை பதிவு செய்தது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. தொடக்க நாளான நேற்று 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள கத்தார் - ஈகுவடார் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஈக்குவேடார் அணியின் ஆதிக்கமே தொடர்ந்தது. அந்த அணிக்கு ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை என்னர் வலென்சியா கோலாக்கினார். இதையடுத்து 31 வது நிமிடத்தில் வலென்சியா மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் அந்த அணி முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டாலும் இறுதியில் கோல அடிக்க இயலவில்லை. இதனால் இரண்டாம் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. இறுதிவரை கத்தார் அணி கோல் எதுவும் அடிக்காததால் ஈகுவடார் அணி முதல் பாதியில் அடித்த இரண்டு கோல்களின் அடிப்படையில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இதற்கு முன்னர் தொடரை நடத்திய அணிகள் முதல் அல்லது தொடக்க ஆட்டத்தில் தோல்வியை தழுவியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தார் உலகக் கோப்பையில் இதுவரை கலந்து கொண்டது இல்லை. போட்டிகளை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் கத்தார் முதல்முறையாக உலகக் கோப்பை தொடருக்குத் தேர்வானது. குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: ஆனாலும் இந்த கத்தார் ரொம்ப ஸ்டிரிக்ட் தாம்பா! ரசிகர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா!!