மைதானத்தின் பெயர் ஃபெரோஸ் ஷா கோட்லா, அரங்கத்தின் பெயர் அருண் ஜெட்லி - புதிய விளக்கம்

மைதானத்தின் பெயர் ஃபெரோஸ் ஷா கோட்லா, அரங்கத்தின் பெயர் அருண் ஜெட்லி - புதிய விளக்கம்
மைதானத்தின் பெயர் ஃபெரோஸ் ஷா கோட்லா, அரங்கத்தின் பெயர் அருண் ஜெட்லி - புதிய விளக்கம்
Published on

ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் அரங்கத்தின் பெயர் மட்டுமே அருண் ஜெட்லி அரங்கமாக பெயர் மாற்றப்பட உள்ளது, மைதானத்திற்கு பெயர் ஃபெரோஸ் ஷா கோட்லா என்றே இருக்கும் என டெல்லி கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.  

டெல்லியிலுள்ள பிரசித்தி பெற்ற கிரிக்கெட் மைதானம் ஃபெரோஸ் ஷா கோட்லா. இந்த கிரிக்கெட் அரங்கம் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த போது புதுப்பிக்கப்பட்டது. அதன் பிறகு கோட்லா மைதானம் நவீன வசதிகளுடன் புதிதாக திறக்கப்பட்டது. 

இந்நிலையில் டெல்லி ஃபெரோஸ் ஷா அரங்கத்தின் பெயரை மாற்ற டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக இன்று நடைபெற்ற டெல்லி கிரிக்கெட் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ராஜாட் ஷர்மா, “அருண் ஜெட்லியின் உதவி மற்றும் ஊக்கத்தால் டெல்லியிலிருந்து சேவாக், காம்பீர், நெஹ்ரா, பண்ட் உள்ளிட்ட வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி உள்ளனர். ஆகவே ஃபெரோஸ் ஷா கோட்லா அரங்கத்திற்கு அருண் ஜெட்லியின் பெயரை வைக்க முடிவு எடுத்துள்ளோம். 

இதனை வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெறும் விழாவில் செய்ய உள்ளோம். மேலும் அன்று இந்த அரங்கத்தின் ஒரு ஸ்டாண்டை இந்திய கேப்டன் விராட் கோலியின் பெயரில் அறிவிக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த சனிக்கிழமை உடல்நல குறைவால் காலமானார். இவர் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தார். அப்போது ஜெட்லி டெல்லி கிரிக்கெட்டிற்கு ஆற்றிய பணிக்கு தகுந்த மரியாதை செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த கிரிக்கெட் மைதானத்திற்கு பெயர் ஃபெரோஸ் ஷா கோட்லா என்ற பெயரிலேயே நீடிக்கும் வெறும் அரங்கத்தின் பெயர் மட்டும் அருண் ஜெட்லி கிரிக்கெட் அரங்கம் என்று மாற்றப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com