பிளே ஸ்டோரில் முதலிடம் பிடித்த FAU-G! 50 லட்சம் பேர் டவுன்லோட்!

பிளே ஸ்டோரில் முதலிடம் பிடித்த FAU-G! 50 லட்சம் பேர் டவுன்லோட்!
பிளே ஸ்டோரில் முதலிடம் பிடித்த FAU-G! 50 லட்சம் பேர் டவுன்லோட்!
Published on

குடியரசு நாளன்று விளையாட்டு பிரியர்களுக்காக அறிமுகமானது ஆன்லைன் மல்டி பிளேயர் கேமான FAU-G. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் nCore கேம்ஸ் என்ற நிறுவனம் இந்த FAU-G விளையாட்டை வடிவமைத்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நடைபெற்ற காள்வான் பள்ளத்தாக்கு சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் சீன நாட்டின் மொபைல் போன் அப்ளிகேஷன்களை தடைவிதித்ததை தொடர்ந்து பிரபல மல்டி பிளேயர் மொபைல் கேமான பப்ஜி விளையாட்டும் முடக்கப்பட்டது. அப்போது முதலே பப்ஜிக்கு மாற்றாக ஏதேனும் புதிய மல்டி பிளேயர் கேம் வருமா என காத்துக் கிடந்த பப்ஜி பிரியர்களுக்கு தற்காலிக விமோசனமாக அறிமுகமாகி உள்ளது தான்  FAU-G. 

இதுவரை FAU-G மொபைல் அப்ளிகேஷனை 5 மில்லியனுக்கும் (50 லட்சம்) அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளனர். இதற்கு 3.4 என ஸ்டார் கொடுத்துள்ளனர் அப்ளிகேஷனை பயன்படுத்தும் பயனர்கள். அதோடு பிளே ஸ்டோரில் ‘கேம்ஸ்’ கேட்டகிரியில் டாப் ப்ரீ அப்ளிகேஷனாக FAU-G முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் பப்ஜிக்கு நல்ல சவாலை கொடுத்துள்ளது FAU-G. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com