ஃபோனி போனா என்ன ? சேப்பாக்கத்தை சுழன்ற தோனி புயல் !

ஃபோனி போனா என்ன ? சேப்பாக்கத்தை சுழன்ற தோனி புயல் !
ஃபோனி போனா என்ன ? சேப்பாக்கத்தை சுழன்ற தோனி புயல் !
Published on

இதோ அப்போ வரும் இப்போ வரும் என ஏகப்பட்ட பில்ட் அப் கொடுத்த ஃபோனி புயல் நம்மூருக்கு எந்த புண்ணியமும் செய்யாம, ஒடிசால போய் கரையை கடக்க முடிவு பண்ணிடுச்சு. ஏதோ, ஃபோனி கடக்குற நேரத்துல லேசா மழை பெய்யுமாம் சென்னைக்கு. அவ்ளோதான். இந்த செய்தியால கவலையோட இருந்த சென்னை மக்களுக்கு சேப்பாக்கத்தில் டெல்லிக்கு எதிராக நேற்று நடந்த மேட்ச்ல சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தல தோனி பேட்டை சுழற்றி அடிச்சதுல, புது புயல் உருவாகிடுச்சோனு நினைத்தவர்கள் பலர்.

மே 1 ஆம் தேதி தல அஜீத்குமார் பிறந்தநாளை அவங்க ரசிகருங்க கொண்டாட்டி இருந்த அதே நேரத்துல சென்னை அணியின் தல தோனியும் அவங்க ரசிகர்களை திருப்திபடுத்தியிருக்காரு.2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 50-ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வாட்சன் 9 பந்துகளை சந்தித்து "டக்" அவுட்டானார். இதையடுத்து "சின்ன தல" ரெய்னா அதிரடியாக விளையாடி 8 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 59 ரன்களை விளாசித் தள்ளினார். இந்த மேட்சல முக்கியத் திருப்பமா தல தோனி 14-ஆவது ஓவர்லதான் களத்துக்கே வந்தார், முதலில் எப்பவும் போல கொஞ்சம் மெதுவா ஆட தொடங்கினார்.

ஆனால், கடைசி 3 ஓவர்களில் தோனி ஆடியது விஸ்வரூப ஆட்டம். மொத்தம் 22 பந்துகளில் 44 ரன்களை விளாசினார் அதில் 3 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் என சேப்பாக்கம் மைதானத்தை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். சரி, பேட்டிங்கோட முடிஞ்சிடுமா தோனியோட வேலை. சிஎஸ்கேவின் 180 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கியது டெல்லி அணி. அந்த அணியின் ப்ரித்வி ஷா 4 ரன்னில் அவுட்டாக, தவானும் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் சென்னை ரசிகர்களை கொஞ்சம் டென்ஷனாக்கினாங்க.

ஆனா, ஹர்பஜன் சிங் சுழலில் தவான் அவுட்டானார். அதுக்கு அப்புறம் டெல்லி அணியின் விக்கெட்டுங்க சீட்டு கட்டுமாதிரி சரிஞ்சது. இதுல தோனியோட பங்கு மிகவும் முக்கியமானது. அதில் தோனி செய்த மூன்று மின்னல் வேக ஸ்டம்பிங். இம்ரான் தாஹிர் வீசிய பந்தில் மோரிஸும், ஸ்ரேயாஸ் ஐயரும் ஒரே ஓவரில் தோனியால் ஸ்டம்பிங்க் செய்யப்பட்டு ஆட்டமிழந்தனர்.

அந்த இரண்டு ஸ்டம்பிங்குமே மின்னலின் வேகத்தை விட படு வேகம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் மேட்ச்ல இம்ரான் தாஹிர் எடுத்தது மொத்தம் 4 விக்கெட் அதில் மூன்று விக்கெட்டுகள் ஸ்டம்பிங். கடைசில சிஎஸ்கே அணி 80 ரன் வித்தியாசத்துல டெல்லிய வீழ்த்தி, புள்ளிப் பட்டியலில் கெத்தா சூப்பரா முதல் இடத்துல இருக்கு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com