டூபிளசி காயம்: சென்னை அணிக்கு சிக்கல்?

டூபிளசி காயம்: சென்னை அணிக்கு சிக்கல்?
டூபிளசி காயம்: சென்னை அணிக்கு சிக்கல்?
Published on

காயமடைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டூபிளசி, ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

கரீபியன் லீக் கிரிக்கெட் தொடரில், செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் டூபிளசி, காயமடைந்த நிலையில், அரையிறுதிப் போட்டியில் பங்கேற்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் தொடர் தொடங்கும் நிலையில், டூபிளசியின் காயம் சென்னை அணி நிர்வாகத்தை கவலையடையச் செய்துள்ளது.

இதனிடையே, இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சாம் கரண், இதுவரை துபாய் வந்து சேராததால், அவரும் மும்பைக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com