'கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை' - டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிபெறுமா ஆஸ்திரேலியா?

'கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை' - டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிபெறுமா ஆஸ்திரேலியா?
'கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை' - டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிபெறுமா ஆஸ்திரேலியா?
Published on

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு ஆஸ்திரேலியா தகுதிப்பெறாது என்றே இப்போதைய புள்ளி விவரங்கள் கூறுகிறது. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தது மட்டுமல்லாமல் மழையை திட்டிக்கொண்டு இருக்கின்றனர்.

டி20 உலகக் கோப்பை தொடரில் இப்போது சூப்பர் 12 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் 1 இல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஒன்றோடு ஒன்று மோதி வருகின்றன. இதில் மெல்போர்னில் நேற்று நடைபெற இருந்த ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் 4 அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதில் மிக முக்கியமாக ஆஸ்திரேலியா அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி ஒரு தோல்வி, ஒரு வெற்றி, ஓர் ஆட்டம் மழையால் ரத்து என 3 புள்ளிகளுடன் மிகவும் மோசமான நெட் ரன் ரேட்டுடன் 4 ஆம் இடத்தில் இருக்கிறது.

புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள்தான் அரையிறுதிக்கு தகுதிப்பெறும். இந்நிலையில் இந்தப் பட்டியலில் முதல் 4 இடங்கள் பிடித்திருக்கும் நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகள் தலா 3 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இந்தச் சுற்றில் நியூசிலாந்து இன்னும் 3 போட்டிகளில் விளையாட இருக்கிறது. மேலும் இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் 2 போட்டிகள் எஞ்சியிருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா அடுத்த இரண்டு போட்டிகளில் வென்றாலும் நெட் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதிப்பெறாது என தெரிகிறது. இதனால் குரூப் 1 இல் இருந்து அரையிறுதிக்கு தகுதிப்பெறும் வாய்ப்பு நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு வலுவாகவே இருக்கிறது.

நியூசிலாந்து இன்றையப் போட்டியில் இலங்கையும், அடுத்தடுத்தப் போட்டிகளில் இங்கிலாந்தையும் அயர்லாந்தையும் எதிர்கொள்கிறது. இதேபோல இங்கிலாந்து அணி நியூசிலாந்தையும், இலங்கையைும் எதிர்கொள்ள இருக்கிறது.

அப்போ ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பே இல்லையா?

நியூசிலாந்து அடுத்த 3 ஆட்டங்களை வெல்ல வேண்டும், மிக முக்கியமாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை வென்றால் ஆஸ்திரேலியாவுக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இங்கிலாந்து அடுத்த 2 போட்டிகளில் வென்றாலே அரையிறுதிக்கு தகுதிப்பெறும். இந்த குரூப்பில் இருக்கும் இலங்கை, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இனி வரும் போட்டிகளில் வென்றாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு வாய்ப்பில்லை. ஆனால் கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்பதால் கத்துக்குட்டி அணிகள் பெரிய அணிகளை வீழ்த்தி அவர்கள் கனவில் மண்ணை போடவும் வாய்ப்பு இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com