இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நாளை நடைபெறுகிறது. இந்தப் போட்டி நடக்கும் ஹால்கோர் மைதானம் அதிகமாக ரன் குவிக்க ஏற்றதாக இருக்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர் சமந்தர் சிங் சவுகான் கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, ‘இரண்டு வருடத்துக்குப் பிறகு இந்த மைதானத்தில் சர்வதேசப் போட்டி நடக்கிறது. அப்போது இருந்த பிட்சை விட இப்போது வேறுவிதமாக மாற்றியிருக்கிறோம். இந்தூர் பிட்ச் பவுன்சருக்கு ஏற்றதாக இருக்கும். இப்போதும் அப்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் சாதகமாக இருக்கும். பேட்ஸ்மேன்களும் இதில் சாதிக்கலாம். அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறது. இங்கு மழை பெய்து வருவதால் பிட்ச் மூடப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 25-ம் தேதி பிட்ச் உருவாக்கத்தில் ஈடுபட்டோம். பிறகு கடந்த 7-ம் தேதி இரண்டு நாள் உள்ளூர் போட்டி இங்கு நடத்தப்பட்டது. அதில் பிட்ச் சிறப்பாக இருந்ததை அறிந்தோம்’ என்றார்.
நாளையும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.