கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கவுள்ளன. இந்த ஆண்டு போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள். 17 நாட்கள் நடைபெறும் இந்த போட்டித் தொடர் அடுத்த மாதம் 11 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஒலிம்பிக் தொடரில் அதிகமான பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி தயாராகியுள்ளது.
இந்த நிலையில், ”தேசத்திற்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறுவது பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்” என இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் தெரிவித்துள்ளார். இந்தியா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது குறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியை இந்த வீடியோவில் பார்க்கலாம்.