இந்தியாவின் உதவியை எதிர்நோக்கி இருந்த பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அகமது, மரணமடைந்தார்.
பாகிஸ்தானின் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அகமது (49). 1986 முதல் 2000 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்தார். ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் ஹாக்கி அணியில் பங்கேற்ற அவர், கோல் கீப்பராகவும் செயல்பட்டார்.
இதயநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த அவர் கராச்சியில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உடனடியாக இதய மாற்று சிகிச்சை மேற்கொள்ள இந்தியாவின் உதவியை எதிர்நோக்கி இருந்தார். விசாவுக்கு காத்திருந்தார். இருதரப்பு உறவுகள் சீரற்ற நிலையில் இருப்பதால் மருத்துவ விசா கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.