குரங்குகள் இடைவெளியை சரியாக கடைபிடிக்கும் வீடியோ ஒன்றை தடகள வீராங்கனை ஹிமா தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.
இந்த கடினமான கொரோனா காலத்தில் பல அரசு அதிகாரிகளும் அரசியல் கட்சித் தலைவர்களும் வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகள் மூலம் தனிமனி இடைவெளியின் முக்கியத்துவம் மற்றும் முகக்கவசம் அணிவது குறித்தும் விழிப்புணர்வை மக்களிடையே பரப்பி வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் மக்களில் சிலர் பின்பற்றுவதாக இல்லை. இதை சாடும் விதத்தில் இந்திய தடகள வீரங்கனை ஹிமா தாஸ், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அர்ஜுனா விருதுபெற்ற தடகள வீராங்களை ஹிமா தாஸ் பகிர்ந்துள்ள வீடியோ ஒருநிமிடம் ஓடக்கூடியது. இதில் இடைவெளியோடு தடுப்புக்கு பின்புறத்தில் அமர்ந்துள்ள மூன்று குரங்குகளுக்கு ஹிமா தாஸ் பிஸ்கட் கொடுக்கிறார். மறுபக்கத்தில் அமர்ந்துள்ள குரங்குகள் அவர் கொடுக்கும் பிஸ்கட்டை அதே இடைவெளியோடு ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்வதை காணலாம். இறுதிவரை மூன்று குரங்குகளும் ஒன்றுக்கொன்று இடைவெளியோடு இருக்கும். சில மணிநேரத்திற்கு முன்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை 3000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர். குரங்குகளால் முடியும் போது மனிதர்களால் முடியாதா என்ன?