யூரோ கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் இன்று காலிறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெறும் நான்கு அணிகள் அறையிறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.
யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு நாட்கள் ஓய்விற்குப் பிறகு இன்று காலிறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் முதலாவது காலிறுதிப் போட்டியில் ஸ்விட்சர்லாந்து அணியை எதிர்த்து ஸ்பெயின் அணி களம் காண்கிறது. இரவு 12.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த இத்தாலி அணியை பெல்ஜியம் எதிர்கொள்கிறது.
அதேபோல் நாளை இரவு 9.30 மணிக்கு நடைபெறும் மூன்றாவது காலிறுதிப் போட்டியில் செக் குடியரசு அணி டென்மார்க் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இரவு 12.30 மணிக்கு நடைபெறும் நான்காவது காலிறுதிப் போட்டியில் உக்ரைன் அணியுடன் இங்கிலாந்து அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த காலிறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.