இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது ஒரு நாள் போட்டியில் ராஸ் டெய்லரின் அதிரடி பேட்டிங்கால் நியூசிலாந்து அசத்தலான வெற்றியை பெற்றது.
டுனேடினில் நேற்று இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து,பந்துவீச்சைத் தேர்வு செய்தது .இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பேரிஸ்டோ மற்றும் ஜேசன் ராய் களமிறங்கினர். நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த இந்தச் ஜோடியில் முதலில் ஜேசன் ராய் 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஜோ ரூட்டும், பேரிஸ்டோவும் நியூஸ்லாந்தின் பந்து வீச்சை லாவகமாக எதிர்கொண்டு ரன் செர்த்தனர். ரூட்101 பந்துகளில் 6 பவுண்டரி ,2 சிக்ஸர்களுடன் 101 ரன்களும், பேரிஸ்டோ 106 பந்துகளில் 7 சிக்ஸர் 14 பவுண்டரிகலுடன் 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த வீரர்கள் பெரிய அளவிற்க்கு சோபிக்க தவறியதால் 50 ஒவ்ர்களில் 9 விக்கெட்டை இழ்ந்து 335 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்நின் சோதி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடின இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.தொடக்க வீரர்களாக வந்த கப்தில், மன்ரோ இருவருமே ரன் எதும் எடுக்காமல் ஆட்டமிழக்க அது நியூஸிலாந்துக்கு பின்னடைவானது. ஆனால், பின்னர் வந்த டெய்லர் , வில்லியம்சன் நிதானமாக ஆடியது. பின்பு, வில்லியம்சன் 45 ரன்களில் ஆட்டமிழக்க, டெய்லர்ருடன் இணைந்த லேதம் ஜோடி அதிரடியாக ஆடி இலக்கை விரட்டியது.
டெய்லரின் துணையால் நியூஸிலாந்து அணி 49.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை அடைந்துள்ளன. கடைசிப் போட்டி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.