மீண்டும் டக் அவுட் ஆன கே.எல்.ராகுல் - 3வது டி20 போட்டியில் இந்தியா நிதான ஆட்டம்

மீண்டும் டக் அவுட் ஆன கே.எல்.ராகுல் - 3வது டி20 போட்டியில் இந்தியா நிதான ஆட்டம்
மீண்டும் டக் அவுட் ஆன கே.எல்.ராகுல் - 3வது டி20 போட்டியில் இந்தியா நிதான ஆட்டம்
Published on

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவிற்கு பதில் ரோகித் சர்மா களமிறங்கினார். அவர் கே.எல்.ராகுல் உடன் தொடங்கவீரராக இறங்கினார். இஷான் கிஷன் மூன்றாவது வீரராக களமிறங்குகிறார். இங்கிலாந்து அணியில் டாம் கர்ரனுக்கு பதில் மார்க் உட் களமிறங்கினார்.

Team News:

1⃣ change for #TeamIndia as @ImRo45 named in the playing XI

1⃣ change for England as Mark Wood picked in the team.@Paytm #INDvENG

Follow the match ? https://t.co/mPOjpECiha

Here are the Playing XIs ? pic.twitter.com/YI5lV7Mxwn
— BCCI (@BCCI) March 16, 2021

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியிலும், இந்திய அணி இரண்டாவது போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் அந்த அணி 2-1 என்ற முன்னிலை பெறும்.

இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் மீண்டும் டக் அவுட் ஆகியுள்ளார். கடந்த போட்டியிலும் அவர் டக் அவுட் ஆகியிருந்தார். முதல் டி20 போட்டியிலும் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார். அதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியிலும் டக் அவுட் ஆகியிருந்தார். இந்திய அணி 4 ஓவர்கள் முடிவில்  ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்தது. ரோகித் 11, இஷான் கிஷன் 4 ரன்கள் எடுத்திருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com