பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து : தாக்குப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ் ?

பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து : தாக்குப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ் ?
பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து : தாக்குப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ் ?
Published on

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்துள்ளது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. இதைத்தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 162 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 469 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. அந்த அணியில் சிப்ளே 120 (372), ஸ்டோக்ஸ் 176 (356) ரன்கள் குவித்தனர்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 99 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க வீரர் பிராத்வொயிட் 75 (165), புரூக்ஸ் 68 (137), ரோஸ்டன் ஜேஸ் 51 (85) ரன்கள் எடுத்தனர். பின்னர் 2வது இன்னிங்ஸ் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்களை விளாசி டிக்ளர் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்டோக்ஸ் 57 பந்துகளில் 78 ரன்களை குவித்தார்.

இதையடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, போட்டியின் கடைசி நாளான 5வது நாளில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 11 ஓவர்களுக்கு 25 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இங்கிலாந்து அணியில் பிராட் 2 விக்கெட்டுகளையும், கிரிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். உணவு இடைவேளை வந்துவிட்டதால் மீதம் இருக்கும் நேரத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் போட்டியை சமன் செய்துவிடலாம் என வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com